கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது சரியானதா அல்லது தவறானதா? (COD Vol 1: கேள்விகள் 36,37) Is It Right Or Wrong To Give Baptism In The Name Of The Lord Jesus Christ? (COD Vol 1 Q&A: 36, 37) 36. ஏன் ஒரு நபர் 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கு'' பதிலாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும்? இரண்டு அல்லது மூன்று என்னிடம் இருக்கின்றன. இங்கே ஒன்று இருக்கிறது. 37. சகோதரன் பில், கடந்த இரவு நீங்கள் பேசிக் கொண்டிருந்த தவறான ஞானஸ்நானம் என்ன, அது தண்ணீரினாலா அல்லது ஆவியினாலா? தண்ணீர் என்றால், இயேசு கிறிஸ்துவின் நாமம் என்று நீங்கள் கூறினீர்கள், ஏன் மத்தேயு 28:19, ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்று கூறுகிறது? தயவு செய்து விளக்கவும். இப்பொழுது, இவையெல்லாம் தாக்கு முனை கொண்ட ஒன்றாகும், ஆனால் இதைப் போன்ற இன்னுமொன்றை இங்கே எங்கோ வைத்திருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். ஓ, அது மூன்று இடங்களைக் குறித்து இருக்கிறது. நான் அதற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன். நாம் பார்ப்போம். என்னுடன் சற்று - சற்று சில நிமிடங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? அது சரி. இப்பொழுது, இப்பொழுது நாம் ஆரம்பித்து இந்த கேள்விகளுக்கு பதிலளிப்போம். ஒருக்கால் சிலவற்றை நாம் நிறுத்தி இவைகளை (மற்றவைகளை) நாளை பார்ப்போம்; இல்லையென்றால், ஞாயிறு ஆராதனையன்று, அல்லது என்றாவது ஒரு நாளில் இவைகளைப் பார்ப்போம். ஆனால் இந்த ஜனங்கள் ஒருக்கால் ... இதைக் கேட்கின்றனர், நாளை ஞானஸ்நானம் இருக்கின்றது. இப்பொழுது நீங்கள் எந்த விதமாக ஞானஸ்நானம் எடுத்திருந் தாலும் அது எனக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் நான் வேதாக மத்தின் அப்போஸ்தல உபதேசத்தை உங்களுக்கு கூற விரும்புகின். பாருங்கள்? இப்பொழுது கடந்த இரவு நாம் பார்த்தோம், கத்தோலிக்க சபையானது ஸ்தாபிக்கப்பட்ட போது அது தவறான இராப் போஜனத்தோடு வந்தது, "நீங்கள் பரிசுத்த அப்பத்தை பெற்றுக் கொள்ளும் போது, அதற்கு அர்த்தம் பரிசுத்த இராப்போஜனம், நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வீர்கள்,'' என்று கூறினது. அது பரிசுத்த ஆவியல்ல; அது ஒரு அப்பம். பிராட்டெஸ்டென்ட் சபை கைகளைக் குலுக்கி, தங்கள் பெயர்களை புத்தகத்தில் பதித்து, அதைப் பெற்றுக் கொள்ளுதல்'' என்று குறிப்பிடுகின்றனர். இப்பொழுது அதைப் பெற்றுக் கொள்ள வேண்டிய உண்மையான வழி ஆவியின் அபிஷேகம்தான். ஆகவே, இப்பொழுது, கத்தோலிக்க சபை மதம் சம்பந்த மான பாடத்திட்டத்தை கொண்டு வந்தது. லூத்தர் அதைக் கொண்டிருந்தார், மெத்தோடிஸ்ட் சபை அதைக் கொண்டிருந்தது, எபிஸ்கோபலியன்கள் அதைக் கொண்டிருக்கின்றனர், இன்னும் அநேகர் அதைக் கொண்டிருக்கின்றனர், மதசம்பந்தமான பாடம். கத்தோலிக்க சபையின் அநேக பாரம்பரியங்கள் இன்னுமாக பிராட்டெஸ்டென்டு சபையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது; வேதாகமத்தின்படி அது இவளை அதனுடன் ஒன்றாக்குகிறது. வேதாகமத்தின் எல்லா பக்கங்களிலும் ஒரு நபருக்கும் கூட ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்னும் நாமத்தில் ஞானஸ் நானம் பண்ணப்படவேயில்லை. அது வேதத்தில் எங்குமேயில்லை! ஒரு சிறிய துண்டை உங்களால் கண்டு பிடிக்க முடியுமானால், என்னிடம் கூறுங்கள், எங்கேயாவது ஒரு மனிதனுக்கு "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்ற நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா என்று எனக்கு காண்பியுங்கள், தயவு செய்து எனக்கு காண்பியுங்கள், ஏனெனில் கடந்த இருபது வருடங்களாக அதை ஆராய்ந்து, ஆராய்ந்து, ஆராய்ந்து, ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். அது பிழையான ஒன்றாகும்! அது ஒரு கத்தோலிக்க உபதேசமாகும், ஒரு வேதக் கட்டளையல்ல. இப்பொழுது அருமை சகோதரனே, அது ஏன் என்று பார்த்து உங்ளுடைய கேள்விக்கு நாங்கள் செல்கிறோம். பரிசுத்த யோவான் .... இல்லை மத்தேயு 28:19. அது சரி, நாம் திரும்பி செல்வோம். ஆகவே, என்னுடன் சேர்ந்து உங்களுடைய வேதாக மத்தை திருப்புங்கள், என்னுடன் சேர்ந்து வாசிக்க உங்களுக்கு ஏதுவாயிருக்கும். இந்த இடத்தில் தான் அதைக் குறித்து பேசப்பட்டிருக்கின்றது. ஒரு இடத்தில் வேதாகமத்தில் .. 'இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் ஒவ்வொரு வார்த்தையும் நிலைவரப்படும்” என்று இயேசு கூறவில்லையா? வேதாகமத்தில் "யூதாஸ்காரியோத்து நான்று கொண்டு செத்தான்' மற்றும் "நீ போய் அந்தவிதமே செய்'' என்று கூறியுள்ள இடத்திற்கு என்னால் உங்களை கொண்டு செல்ல முடியும். இயேசு இவ்வாறு கூறின இடத்திற்கு உங்களை என்னால் கொண்டு செல்ல முடியும், "மனுஷ குமாரன்'' அது அவரே தான், இப்பொழுது பரலோகத்திலிருக்கிறவர், திரும்பவும் வருவார், அவர் சரியாக பூமியின் மேல் நின்று கொண்டிருந்தார் ஆகவே அவர் "இப்பொழுது பரலோகத்திலிருக்கிற மனுஷ குமாரன்'' என்றார். அவர் சரியாக பூமியின் மேல் நின்று கொண்டிருந்தார். நீங்கள் அவருடைய வார்த்தையை அறிந்து கொள்ளவேண்டு மெனில் நீங்கள் தேவனை அறிந்து கொள்ள வேண்டும். உங்களால் ... 'அது தனக்குத்தானே முரண்பாடாக இருக்கின்றது! அது குழப்பமானது'' என்று நீங்கள் கூறுவதில் வியப்பொன்றுமில்லை! ஏனெனில் அதை கல்விமான்களுக்கும் இன்னும் மற்றவர் களுக்கும் மறைக்கும் விதத்தில் அதை அவர் எழுதினார் என்று தேவன் கூறினார். ஜனங்கள் பீடத்தண்டை தாழ்மையாகட்டும், தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். இப்பொழுது இங்கே வேதவசனம் மத்தேயு 28:19ல் இந்த பட்டப்பெயர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற ஒரேயொரு இடம் ஆகும். ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, இப்பொழுது நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுகின்ற விதமானது, "பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவின் நாமத்தில்,'' என்பதே. அது வேதாகமத்தில் இல்லவே யில்லை! ஆனால் எல்லா ஜாதிகளுக்கும் போதித்து ... நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து!'' என்று இங்கே இருக்கிறது. இப்பொழுது உங்கள் வேதாகமத்தில் நேராக நோக்கி, ''நாமங்களில்'' என்றா அல்லது "நாமத்தில்'' என்றா கூறுகிறது என்று பாருங்கள். இப்பொழுது நீங்கள் கூறலாம் . . . இப்பொழுது, இங்கே சில காலத்திற்கு முன்னர் ஒரு கூட்டத்தில், ஒரு ஆள், வேதாகமத்தில் ஒரு முரண்பாடு இருக்கிறது! நீங்கள் அதை எனக்கு விளக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏன் இயேசு ஜனங்களுக்கு பிதா குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்க, பேதுரு வந்து திரும்பி அப்போஸ்தலர் 2:38ல் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின்' நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான். அது தன்னைத் தானே முரண்பாடுபடுத்திக் கொள்ளவில்லையெனில், நான் ஒரு முரண்பாட்டையும் காணமாட்டேன்'' என்றான். நான் ''ஏனெனில் நீ சரியாக தேவனை நாடவில்லை என்பதால் தான்'' என்று கூறினேன். அவன் ''சகோதரன் பிரன்ஹாம், நான் இந்த விதமாகவோ அல்லது அந்த விதமாக ஞானஸ்நானம் கொடுத்தால் எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்குகிறதா?'' அது என்றான். அது நிச்சயமாக உண்டாக்குகிறது, அதை வேதத்தைக் கொண்டு நான் நிரூபிப்பேன். மோசே... தேவன் மோசேயிடம் கூறினார், முட்செடி யண்டை வந்த போது, "மோசே, உன் பாதரட்சையை கழற்றிப் போடு , நீ பரிசுத்த பூமியின் மேல் நின்று கொண்டிருக்கிறாய்,'' என்று கூறினார். அவன், “இப்பொழுது, கர்த்தாவே, நான் ஒரு பயபக்தியான மனிதன். என் பாதரட்சை கழற்றுவதற்கு சிறிது கடினமாக உள்ளது, ஆகவே நான் என் தொப்பியை கழற்றி விடுகிறேன்'' என்றான். அவர் 'தொப்பி ,'' என்று ஒருபோதும் கூறவில்லை. அவர் "பாதரட்சை!'' என்று கூறினார். வேதம் என்ன கூறுகிறதோ அது தான் சத்தியம். இப்பொழுது...... இங்கே, இது பத்து நாட்களில், இது தான் மேல் ஏறிச் சென்ற தாகும். ஆகவே இயேசு மேலே எடுத்துக்கொண்ட போது, தம்முடைய சீஷர்களுக்கு, உலகெங்கிலும் போய் எல்லா ஜாதி களுக்கும் போதித்து, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க கட்டளையிட்டார். ஆகவே பத்து நாட்களுக்கு பிறகு - ... அவர்கள் எருசலேமுக்கு போய் பரிசுத்த ஆவி வரத்தக்கதாக மேலறையில் காத்திருந்தனர். ஆகவே பிறகு அவர்கள் பிரசங்கிக்க ஆரம்பித்த போது இன்னும் ........ அவர்கள், ''இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். பேதுரு, ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்று கூறினான். பிறகு அவன் கொர்நேலியுவின் வீட்டிற்கு சென்றான், அவன், "நீங்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றான். அவன் சென்று சில ஜனங்கள் ஏற்கெனவே ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருப்பதை கண்டு, “நீங்கள் மறுபடியுமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங் கள்'' என்று கூறினான். 3 அவன் சமாரியாவிற்கு சென்று, "இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று கூறினான். ஒரு முறை கூட அந்த பட்டப் பெயர்கள் ஒரு நபரின் மீது கூறப்படவேயில்லை. ஒருக்காலும் இல்லை! 'இப்பொழுது, அப்படியானால் அங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது,'' என்று நீங்கள் கூறலாம். இல்லை, அப்படி இல்லை, அப்படி இல்லை. இப்பொழுது பரிசுத்த ஆவியிடம் மாத்திரம் கேளுங்கள், அவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவதை கவனியுங்கள். உங்கள் இருதயத்தை திறந்துவிடுங்கள். இப்பொழுது, அதற்கெதிரான கருத்தை வைத்திரா தேயுங்கள், நீங்கள் அப்படி செய்வீர்களானால், தேவனால் உங்களிடம் பேசமுடியாது. ஆனால் நீங்கள் அதற்கெதிரான கருத்தை வைத்திரமால், 'சகோதரன் பிரன்ஹாம் நான் உண்மை யாகவே சத்தியத்திற்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று கூறுங்கள். இயேசு சீஷர்களிடம் "போய் இதை செய்யுங்கள்'' என்று கூற, அவர்கள் சென்று இங்கே வித்தியாசமான ஒன்றை செய்திருக்க, இன்னுமாக தேவன் அதை வேதாகமம் முழுவதுமாக ஆசீர்வதித்தார், இப்பொழுது, செய்யக் கூடாது என்று இயேசு கூறினதையா அவர்கள் செய்தனர்? அப்படி அவர்கள் செய்திருந்தால், அவர்கள் கீழ்ப்படியாமல் போய்விட்டனர் என்று அர்த்தம், ஆகவே தேவன் ஒருக்காலும் கீழ்ப்படியாமையை கனம் பண்ணுவதே கிடையாது. அப்படி அவர் செய்திருந்தால், அவர் ஏவாளை கனம் பண்ணி துவக்கத்திலேயே முழு காரியத்தையும் நிறுத்திப் போட்டிருப்பார். தேவன் எதையாவதொன்றை கூறும் போது, அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளத்தான் வேண்டும்; அவர் சர்வ சுதந்திரமுள்ளவர். ஆதலால் அப்படியானால் ஒருக்கால் பேதுரு தவறு செய்திருந்ததாக இருந்தால்... "ஓ, அது அப்போஸ்தலர்கள் கூறின ஒன்றாயிற்றே" ஒரு ஆள் 'அது அப்போஸ்தலர்கள் கூறினது. இயேசு என்ன கூறினாரோ அதைத்தான் நான் செய்யப்போகிறேன்'' என்று கூறினான். நல்லது, செய்யவேண்டாம் என்று இயேசு கூறினதை அப்போஸ்தலர்கள் செய்தார்கள் என்றால், அப்படியானால் என்ன? இந்த வேதாகமத்தை எழுதின அப்போஸ்தலர்கள் ... பவுல் இந்த எல்லாவற்றையும் எழுதினான், ஆகவே அவர்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்படத்தக்கதாக செய்தவன் பவுல் ஆவான். இந்த புதிய ஏற்பாட்டின் பெரிய பகுதியை பவுல் எழுதியிருக் கையில், அப்படியானால் நீங்கள் எவ்விதமாக எழுதப்பட்ட வேதாகமத்தை உடையவர்களாய் அதை வாசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இதை நாம் இப்படியாக வைப்போம். நீங்கள் உண்மையாக நியாயமான விதத்தில் கேட்டு வார்த்தை என்ன கூறுகிறதென்று பாருங்கள். இப்பொழுது, நீங்கள் தேவனுடைய வார்த்தையை தெரிந்து கொள்ளுவதற்கு இது வளர்ப்பு பயிற்சியாகும். இப்பொழுது, இயேசு அவனிடம் ''பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்கும்படி கூறின பிறகு பேதுரு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்திருப்பானானால், அவன் இயேசு என்ன கூறினாரோ அதற்கு முரணான ஒன்றை செய்திருக்கிறான். அது உண்மையல்லவா? இப்பொழுது, இங்கு ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இப்பொழுது நாம் அதைக் கண்டு பிடித்து, பரிசுத்த ஆவியானவர் அதை நமக்கு காண்பிக்கத்தக்கதாக நாம் கேட்போம். இப்பொழுது முதல் காரியமாக, இப்பொழுது முதலாவது வேதவசனத்தை எடுப்போம். மத்தேயு 28:19. ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா ... குமாரன் . . . பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள். உங்கள் வேதாகமத்தில், 'பிதாவின், குமாரனின், பரிசுத்த ஆவியின் நாமங்களில் ' என்று கூறுகிறதா என்று பாருங்கள். அப்படியா? இல்லை, ஐயா. அது பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில்" என்றா கூறுகிறது? அது ''நாமத்திலே!'' என்று கூறுகிறது. அது சரியா? நல்லது, அந்த "நாமம்'' ஒருமையாயிருக்கிறது. அது சரியா? நல்லது, எந்த நாமத்தில் அவர்கள் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்று அவர் விரும்பினார், பிதாவின் நாமத்திலா, அல்லது குமாரனின் நாமத்திலா, அல்லது பரிசுத்த ஆவியின் நாமத்திலா? அவர், ''நாமத்திலே!'' என்று கூறினார். நல்லது, வெளிப்படையாகக் கூறினால், அவைகளில் ஒன்று கூட ஒரு நாமம் அல்ல. எத்தனை பிதாக்கள் (Fathers) இங்கே இருக்கிறீர்கள், உங்கள் கரத்தை - உங்கள் கரத்தை நான் காணட்டும். அது சரி. உங்களில் யாருக்கு 'பிதா'' (Father) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது? பிதா என்பது ஒரு பெயரல்ல; பிதா என்பது ஒரு “பட்டப் பெயராகும்.'' எத்தனை குமாரன்கள் இங்கே இருக்கின்றனர்? நிச்சயமாக, ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஆணும், அவர்கள் குமாரன்கள். நல்லது உங்களில் இருக்கின்ற யாராவது ஒருவருக்கு ''குமாரன்'' என்று பெயரிடப்பட்டிருக்கின்றதா? அது ஒரு பெயர் அல்ல; அது ஒரு பட்டப்பெயராகும். அது சரியா? அது ஒரு பெயரல்ல; அது ஒரு பட்டக் பெயராகும். நல்லது, உங்களில் யாராவது ஒருவருக்கு ''மானிடன்'' என்று பெயரிடப் பட்டிருக் கிறதா? எத்தனை மானிடர்கள் இங்கே இருக்கின்றனர்? நீங்கள் எல்லாரும். நல்லது, உங்களில் யாருக்கு 'மானிடன்'' என்று பெயரிடப்பட்டிருக்கிறது? அப்படிப்பட்ட ஒன்று இல்லவே இல்லை; அது தான் நீங்கள். பரிசுத்த ஆவி ஒரு பெயரல்ல; அது தான் அது. நான் ஒரு மானிடன். ஆகவே பிதா, குமாரன் அல்லது பரிசுத்த ஆவி என்பவை ஒரு ''நாமம்" இல்லை; அவைகள் ஒரு பெயரைச் சேருகின்ற மூன்று பட்டப்பெயர்கள் மாத்திரமே ஆகும். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். என்ன . . . இங்கே கவனியுங்கள்! இதை நான் குழந்தைகளுக்கு கூறும் விதத்தில் கூறுவேன். நீங்கள், நல்லது, கூறினால் நீங்கள் ஒரு ஒரு - ஒரு கதை புத்தகத்தை படிப்பது போல, ''ஜானும் மேரியும் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்'' என்று அது கூறுமானால், பிறகு நீங்கள், ''ஜானும் மேரியும் யார்?'' என்று வியப்பீர்கள். நல்லது, ஜானும் மேரியும் யார் என்று நீங்கள் அறிந்து கொள்ளக்கூடிய ஒரோயொரு வழி என்னவென்றால் நீங்கள் திரும்பி சென்று அந்த கதையின் துவக்கத்திற்குச் சென்று அதைப் படிக்க வேண்டியதேயாகும். அது சரியா? நல்லது, இயேசு இங்கே “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று கூறியிருக்க, பிதா ஒரு நாமம் அல்ல, குமாரன் ஒரு நாமம் அல்ல, பரிசுத்த ஆவி ஒரு நாமம் அல்ல, என்ன, அப்படியானால் இந்த நபர் யார்? அவர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். இப்பொழுது, செய்ய வேண்டிய சிறிந்த காரியம். அது மத்தேயு கடைசி அதிகாரம், கடைசி வசனம். நாம் மத்தேயு 1ஆம் அதிகாரம் முதல் வசனங்களுக்கு திருப்பி, ஆரம்பித்து இந்த பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் என்பதை பார்ப்போம். இப்பொழுது, இங்கே இருக்கின்ற இந்த சிறு பிள்ளைகளுக்காக நான் இதைச் செய்ய விரும்புகிறேன், அவர்களும் இதை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். முதல் காரியமாக, இது பிதாகுமாரன் பரிசுத்த ஆவி என்னும் உங்கள் 'திரித்துவத்திலிருந்து உங்களை தெளிவாக்கும். (சகோதரன் பிரன்ஹாம் மூன்று பொருட்களை கொண்டு விளக்குகிறார் - ஆசி இப்பொழுது, முதல் காரியமாக, வேதத்தில் எந்த ஒரு இடத்திலும் திரித்துவம் என்று கூறப்படவேயில்லை. நீங்கள் கண்டு பிடித்து எனக்கு காண்பியுங்கள். அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்வவேயில்லே, அது கத்தோலிக்க தவறாகும், பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்களும் அதற்கு தலை வணங்கு கிறீர்கள். இப்பொழுது கவனியுங்கள். இது என்ன? இது யார் என்று கூறினேன்? பிதா, இது யார் குமாரன். பிறகு இது யார்? [சபையார், 'பரிசுத்த ஆவி என்று கூறுகின்றனர் - ஆசி] இப்பொழுது, பிதாவாணபோர் யாருக்கு பிதாவாக இருக்கிறார்? குமாரனுக்கு. அது சரியா இப்பொழுது இது இயேசுவின் பிதா ஆகும். குழப்பிக்கொள்ளாதீர்கள், இப்பொழுது. இங்கே இது பிதா, இது குமாரன், பிறகு இது பரிசுத்த ஆவி. அது சரியா? இப்பொழுது, ஜனங்கள் இதை மூன்று தனித்தனியான ஜனங்கள், மூன்று வெவ்வேறான தேவர்கள், மூன்று வெவ்வேறு நபர்கள்'' என்று கூறுகின்றனர். இதை யூதன் புரிந்து கொள்ளாதிருப்பதில் வியப்பொன்றுமில்லை! அது சரி. மத்தேயு 1வது அதிகாரம் இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாற்றோடு துவங்குகிறது, ''ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்'' இன்னுமாக படிப்படியாக வந்து 18வது வசனத்தில் - இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் ...... இங்கே இருக்கிறது, 18வது வசனம். இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது .... (உங்கள் வேதாகமத்தோடு என்னை பின் தொடருங்கள்) ...இந்த மனிதனாகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவராமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் ... கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது (தேவனாகிய பிதாவா?) அதை நான் சரியாக வாசித்தேனா? அது என்ன கூறுகிறது? [சபையார் பரிசுத்த ஆவியினாலே'' என்று கூறுகின்றனர் - ஆசி] அவள் யாரால் கர்ப்பவதியானாள்? ("பரிசுத்த ஆவி') இந்த மனிதன் தான் அவருடைய பிதா என்று யாரோ ஒருவர் கூறினார் என்று நினைத்தேன்? வேதாகமம் இந்த மனிதன் தான் அவருடைய பிதா என்று கூறுகிறது. .....அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. இப்பொழுது எந்த விதமான குழந்தையை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்? தேவன் தான் அவருடைய பிதா என்று இயேசு தெளிவுபடக் கூறினார். அது சரியா? தேவன் தான் அவருடைய பிதா! நல்லது, அப்படியானால் அதனுடன் பரிசுத்த ஆவிக்கு என்ன வேலை இருக்கிறது? வேதாகமம் பரிசுத்த ஆவியானவர் தான் அவருடைய பிதா என்று கூறியிருக்க , இயேசு தேவன் தான் அவருடைய பிதா என்று கூறினார்; தேவன் தான் அவருடைய பிதா என்று கூறினார்; தேவன் தான் அவருடைய பிதா என்று நீங்கள் கூறினீர்கள், இப்பொழுது வேதாகமம் இங்கே இவ்விதம் கூறுகிறது. அப்படியானால் மூன்று, இரண்டு தனித்தனியான ஆட்களாயிருந்தால், அதனுடன் தேவனுக்கு எந்த வித வேலையும் கிடையாது. பரிசுத்த ஆவியானவரே தான் அவருடைய பிதா. இப்பொழுது இதை இன்னுமாக வாசிப்போம். .... அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து தானே முன்வந்து அவளை அவமானப் படுத்த மனதில்லாமல், ஆனால் இரகசியமாய் அவன தள்ளிவிட யோசனை யாயிருந்தான் ஆனால் இதோ அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக் கையில் ... கர்த்தருடைய காதல் சொப்பனத்தில் அவனுக்கு காணப்பட்டு. தான்தன் மாரகைய யோசேப்பே உன் மனைவியாகிய மரியானைச் சோத்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியார்க்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. பிதாம்பத்ய தேன் அல்ல; தேவனாகிய பரிசுத்த ஆவி! உங்களுடைய திரித்து போருக்கானது எங்கே செல்லும் என்று நீங்கள் பாருங்கள்? அது இயேசு கலை முறைதவறிப் பிறந்த ஒரு குழந்தையாக ஆக்கிவிடும். நிச்சயமாக. அது பிழையான ஒன்றாகும்! அதற்கு எந்த ஒரு வேதியேகமமும் இல்லை. இப்பொழுது அந்த பிதாவாகிய தேவன், பிதாவாகிய பரிசுத்த ஆவி அதே நபர்தான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், இல்லையேல் இயேசு இரண்டு வித்தியாசப்பட்ட அப்பாக்களை கொண்டிருக்க வேண்டியவராக இருக்க வேண்டும். அது சரியா? நிச்சயமாக, அது சரி. வேதாகமம், "பரிசுத்த ஆவி அவருடைய பிதா'' என்று கூறுகிறது, வேதாகமம், தேவன் அவருடைய பிதா'' என்று கூறுகிறது. இப்பொழுது, எது அவருடைய பிதா? பரிசுத்த ஆவியும் தேவனும் ஒரே ஆவியாகும்; அது அதே காரியமாகும். தீர்க்கதரிசியின் மூலமாய், கர்த்தரின் மூலமாய் உரைக்கப் பட்டது நிறைவேறும் படி இதெல்லாம் நடந்தது. ..... ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு பிள்ளையைப் பெறுவாள் ...... அவர்கள் ..... (இந்த ஒன்று) ..... அவர்கள் அவருக்கு இயேசு என்று பேரிடுவார்கள்: ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். ....... நிறைவேறும் படி இவையெல்லாம் நடந்தது. அவருடைய நாமம் இம்மானுவேல் என்று அழைக்கப்படும், அதற்கு வியாக்கியானமானது தேவன் நம்மோடிக்கிறார். இப்பொழுது, பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்றால் யார்? பேதுரு தவறு செய்தானா? இயேசு அவனிடம் கூறினதைத் தான் செய்தான். அது மூன்று பட்டப்பெயர்களாகும். நான் ஒரு ஊழியக்காரன், நான் ஒரு தந்தையாக இருக்கிறேன், நான் ஒரு 'சங்கை'' என்பதாகவும் இருக்கிறேன், அவர்கள் அதை ஒரு பட்டப்பெயர் என்று அழைக்கின்றனர், ஆனால் அவைகளில் ஒன்று கூட என்னுடைய பெயராக இல்லை. என்னுடைய பெயர் வில்லியம் பிரன்ஹாம் ஆகும். அவர் தான் பிதா, அவர் தான் குமாரன், அவர் தான் பரிசுத்த ஆவி. நண்பர்களே, மூன்று தேவர்களாக ஆக்க நீங்கள் முயற்சிக்கின்றீர்கள்; அது தவறு; அது பிழையான ஒன்றாகும். திரித்துவாதி குழப்பிக் கொண்டிருக்கின்ற மூன்றாம் வககள் இருக்கின்றது. பிதாவாகிய தேவன், அக்கினி ஸ்தம்பத்தில் இஸ்ரவேல் புத்திரரின் மேல் தொங்கிக் கொண்டார். ஆவி யானவர் ஆவார். அது சரியா? தேவன் அங்கே இருந்தனர். பிறகு மாம்சமாக்கப்பட்டு அவருடைய குமாரனுக்குள் நாம் டையே வாசம் பண்ணினார் (அது சரியா?). இப்பொழுது அவர் பரிசுத்த ஆவியினாலே மனிதனுடைய இருதயத்திற்குள்ளாக வரக்க்க்கதாக இப்பொழுது அவர் எளிமை தோன்ற கீழே இறங்கி அருள் செய்கின்றார். தேவன் ஒரு மூன்றடி அளவுகோல், அல்லது இரு மன்றடி அளவு கோலைப் போல் இருக்கின்றார். முதல் பன்னிரண்டுஅங்குலங்கள். பிதாவாகிய தேவனாகும்; கொட்டாவது பன்னிரண்டு - அங்குலங்கள் குமாரனாகிய தேவன். அதே தேவன் ஆகும்; மூன்றாவது பன்னிரண்டு - அங்குலங்கள் பரிசுத்த ஆவியாகிய தேவன், அதே தேவன் ஆகும். இயேசு கூறினார் .. நீங்கள், ''நல்லது, நாங்கள் பரிசுத்த ஆவியைங்களுக்குள் கொண்டிருக்கிறோம்' என்று கூறலாம். அது சரி. ஆனால் இயேசு கூறினார், “இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைக் காணாது. இன்னுமாக நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான்...'' ''நான்'' என்பது ஒரு தனிப்பட்ட பெயர்ச்சொல்லினிடத்திற் பயன்படுத்தப்படும் சொல்லாகும். "உலக முடிவுபரியந்தம் உங்களுடனே, உங்களுக்குள்ளே நான் இருப்பேன்.'' அப்படியானால் பரிசுத்த ஆவி எங்கே? ''நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்; நான் மறுபடியும் வந்து உங்களுடனே இருப்பேன்.'' அது தான். நீங்கள் பாருங்கள், நண்பனே, இதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அது மூன்று யுகங்களில் ஒரே தேவன் ஆகும். பிதாத்துவம், குமாரத்துவம், மற்றும் பரிசுத்த ஆவியின் யுகம், அது அதே தேவன் தான். ஆகவே அவர் "நீங்கள் புறப்பட்டுப் போய் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று கூறின போது, அது இயேசு கிறிஸ்துவாகும். அதன் காரணமாகத் தான் நாங்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றோம். இப்பொழுது கவனியுங்கள், நாம் இங்கே ஞானஸ் நானங்களைப் பார்ப்போமாக. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப் பட்டிருக்கின்ற முதல் முறையான ஞானஸ்நானம், யோவான் ஸ்நானகனுடையதாகும். அது சரியா? நான் இதை இங்கே மேலே வைக்கிறேன். நீங்கள் பாருங்கள், ஞானஸ்நானமானது தெளிவாக் கப்படும் முன்னர் நீங்கள் உங்கள் தேவத்துவத்தின் பேரில் தெளிவாகிக் கொள்ள வேண்டும். அது யோவான் ஸ்நானகனு டையதாகும், முதல் ஞானஸ்நானம். குறிப்பிடப்பட்டிருக்கின்ற இரண்டாவது ஞானஸ்நானம் அப்போஸ்தவர் 2:38, புதிய சபையில் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது ஆகும். இரண்டாவது இடமானது கொர்நேலியுவினுடைய வீட்டில், அல்லது இல்லை... என்னை மன்னிக்கவும், சமாரியர்கள், அப்போஸ்தலர் 7: 48 மற்றும் 49. பிறகு அப்போஸ்தலர் 10:49 ல் கொர்நேலியுவின் வீட்டில் அவன் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அதற்கு பிறகு ஞானஸ்நானம் பற்றி குறிப்பிடப் பட்டிருப்பது என்னவென்றால், நாமங்களோ அல்லது பட்டப் பெயர்கள் அழைக்கப்பட்டதென்றால், அது அப்போஸ்தலர் 19:5ல் இப்பொழுது, பெந்தொகொஸ்தே நாளில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட போது, அப்போஸ்தலர் 2:38, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். அது சரியா? குறித்துக் கொள்ளுங்கள், அதை மேலே பாருங்கள். அடுத்ததாக, பிலிப்பு சென்ற போது இரண்டு நாட்களுக்குப் பிறகு, சமாரியர்களுக்கு பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான்; அவர்களுக்கு பிரசங்கித்து, வியாதியஸ்தரை சுகப்படுத்தி, அங்கே ஒரு மகத்தான கூட்டத்தை (Meeting) உடையவனாக, அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான். பேதுரு சென்று அவர்கள் மீது கைகளை வைத்தான்; அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். சிறிது நாட்களுக்குப் பிறகு பேதுரு மேல் வீட்டில் ஏறினான், பசியாயிருந்தான், அவன் ஒரு தரிசனத்தைக் கண்டான். தேவன் அவனை கொர்நேலியுவின் வீட்டிற்கு அனுப்பினார். பேதுரு இந்த வார்த்தைகளை பேசிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங்கினார். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசத் துவங்கி முதன் முதலாக அவர்கள் செய்தது போலவே அவர்களும் செய்தனர். பேதுரு அவர்களுக்கு இன்னுமாக ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை'' என்றான். ஆகவே அவர்கள் ஒவ்வொரு வருக்கும் இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ் நானம் கொடுக்க கட்டளையிட்டான். வேதாகமத்தில் ஒவ்வொரு நபருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. பவுல் இல்லை. யோவானின் சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை, அவர்களுக்கு மனந்திருப் புதலுக்கேற்ற ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. நாம் ஒன்று கொரிந்தியருக்கு திரும்புவோம்.... இல்லை, நாம் சற்று அப்போஸ்தலர் 19வது அதிகாரத்திற்கு திருப்புவோம். நண்பர்களே இதை நீங்கள் காணத்தக்கதாக ஒரு நிமிடம் படியுங்கள், அது அல்ல - அது அல்ல. அவைகள் ..... வேதவசனம் ஒரு போதும் ஒன்றுக் கொன்று முரண்பாடாக இராது. இங்கே கவனியுங்கள். அப்போல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் .... எபேசுவுக்கு வந்தான்; அவன் சில சீஷரைக் காண்கிறான் நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள் பரிசுத்த ஆவி உண்டென்பது எங்களுக்கு தெரியாதே என்றனர். அவன் அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்று கேட்டான் ஓ, எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது என்று கூறினார்கள். எவ்விதமாக, என்றான்? ...யோவான், யோவான் கொடுத்த ....... என்றார்கள் அவன் கூறினான், யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நீங்கள் விகாசிகளாயிருக்க வேண்டும் என்று மனந்திரும்புதலுக்கென்று மாத்திரமே ஞானஸ்நானத்தைக் கொடுத்தான். அதைக் கேட்டபோது அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மறுபடியுமாக ஞானஸ்நானம் பெற்றார்கள். ... பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்த போது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். அந்த மகத்தான பரிசுத்த பவுல் .... கவனியுங்கள் இயேசு கிறிஸ்துவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே மனிதனாகிய யோவான் ஸ்நானகனால் நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால் என்ன? ஒரு பரிசுத்த மனிதன், இயேசுவும் கூட, '' ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் போவான் ஸ்நானனைப் பிறந்ததில்லை,'' என்று கூறினார். தீர்க்கதரிசிகள் எல்லாருக்கும் மேலானவன் அவன் தான். அவன் இயேசுவை தண்ணீருக்குள் வழி நடத்தி யோர்தானில் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். சகோதரனே, நான் அவனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருப் பேனானால், அதைக் குறித்து நான் மிகவும் நலமாக உணருவேன். அது சரியா? ஆனால் பவுல் திரும்பி ''அது இப்பொழுது செல்லாது! நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும்'' என்றான். “ஓ, பவுலே, நாங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோமே! யோவானால், சரியாக யோர்தான் நதியிலேயே எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.'' அவன், "அது இப்பொழுது கிரியை செய்யாது. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும்'' என்றான். ''எப்படி?'' "யோவான் மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தான். இது பாவ மன்னிப்புக்காக, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. அவர்களுக்கு மறுபடியுமாக ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டியதாக இருந்தது, மறுபடியுமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். வேதாகமத்தில் எந்த ஒரு இடத்திலாகிலும், அல்லது வரலாற்று முழுவதுமாக கடைசி அப்போஸ்தலன் மரித்து முதல் அறுநூறு வருடங்களாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தவிர வேறு எந்த ஒரு வழியிலும் அவர்கள் ஞானஸ்நானம் கொடுத் தார்களா? நீங்கள் விரும்பும் எந்த ஒரு கத்தோலிக்க பாதிரியிடமும் கேட்டுப் பாருங்கள், யார் அதை மாற்றினார்கள் என்று அவர் களிடம் கேட்டுபாருங்கள், உங்களிடம் அவர்கள் என்ன கூறு கின்றனர் என்று பாருங்கள். அவர்களுடைய உபதேச புத்தகத்தை படித்துப் பாருங்கள்; அது "நிச்சயமாக, பிராட்டெஸ்டென்டு களில் சிலர் இரட்சிக்கப்படுவர், ஏனெனில் நம்முடைய ஞானஸ் நானத்திற்கு அவர்கள் தலை வணங்குவதால்'' என்று கூறுகிறது. அவர்கள் அதை மாற்றிப் போட்டனர். அதை செய்வதற்காக வல்லமையும் அதிகாரத்தையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகின்றனர், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள் ! அதைத் தான் அவர்கள் கூறுகின்றனர், அதைத் தான் அவர்கள் உரிமை கோருகின்றனர், அதற்குத் தான் பிராடெஸ்டென்ட் சபையும் தலை வணங்குகிறது. ஆனால், வேதப்பூர்வமாக, அது வேதவசனத்தின் ஒரு சிறிய அளவு கூட அது கிடையாது. அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ் நானம் பண்ணப்பட வேண்டியதாயிருந்தது. இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது சீக்கிரமாக, ஆகவே நாம் சரியாக இந்த கேள்விகளின் பேரில் நீண்ட நேரம் நான் உங்களை காத்திருக்க வைக்க விருப்பமில்லை. கவனியுங்கள், இயேசு தம்முடைய சீஷர்களோடு மறுரூபமலையிலிருந்து கீழே இறங்கி வந்த நாளிலே, அவர், 'என்னை யார் என்று மனிதன் சொல்கிறான், அவர்கள் என்ன சொல்கிறார்கள்?'' என்றார். ''சிலர் உம்மை யோவான் ஸ்நானன்' என்றும், சிலர் உம்மை எலியா' என்றும், சிலர் உம்மை 'தீர்க்கதரிசி' என்றும் சொல்கிறார்கள்'' அவர் "ஆனால் நீங்கள் என்னை யார் என்று சொல்லு கிறீர்கள்?'' என்றார். பேதுரு, "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து!'' என்று கூறினான். அவர் “யோனாவின் குமாரனாகிய சீமோனே -- சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. இதை நீ ஏதோ ஒரு சபையில் கற்றுக் கொள்ளவில்லை, ஒரு வேதகலாசாலையில் இதை நீ கற்றுக் கொள்ள வில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார், மேலும் இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை'' என்றார். இப்பொழுது, கத்தோலிக்க சபை, 'அது பேதுருவாகும். அவர்கள் அங்கே ஒரு கல்லை வைத்திருந்தனர், அது இன்னுமாக வாடிகன் நகரத்தில் இருக்கிறது'' என்று கூறுகிறது. அது எருசலேம் அல்லது பாலஸ்தீனத்தில் இருந்தது. அவர்கள் அது கல்லாகும் என்று கூறினர். பிராடெஸ்டென்ட் சபையும், ''அது பேதுருவாகும் அதின்மேல் தான் நாங்கள் சபையை கட்டியுள்ளோம்'' என்று கூறுகின்றது. அப்படியானால், சில நாட்களுக்கு பிறகு அது பின்மாற்றம் அடைந்ததே. அது அல்ல. சபையானது தேவனுடைய தெய்வீக வெளிப்பாட்டின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. ''மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பேதுருவே, ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல், தேவனுடைய வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல், என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை'' இங்கே தான் நான் கூறுகிறேன், லூத்தரன், மெத்தோடிஸ்டு, அல்லது நீங்கள் யாராயிருந்தாலும் சரி, பெந்தெகொஸ்தேக்கள் நீங்கள் யாராயிருந்தாலும் சரி, ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்கு வதில்லை; தேவனுடைய சபையானது சென்று கொண்டிருக்கு மானால், ஊக்குவித்தலின் வல்லமையில், அவள் சரியாக மேலும், மேலும், மேலும், மேலும் சென்று கொண்டேயிருப்பாள். எந்த ஒரு ஸ்தாபனமும் அதை நிறுத்தவே முடியாது. உலகத்திலுள்ள எதினாலும் அதை நிறுத்த முடியாது. ''இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை'' ஆவிக்குரிய வெளிப்படுத்தப்பட்ட சத்தியம்! இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது அடுத்ததாக, அவர் கூறுகிறார், ''நீ சீமோனாய் இருக்கிறாய் நான் உனக்கு தருவேன். ஏனெனில் அவன் ஆவிக்குரிய, வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தைக் கொண்டிருந்தான், அதன் காரணமாகத்தான் பிதா, குமாரன் பரிசுத்த ஆவி மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்திருந்தான். அவன் ஆவிக்குரிய வெளிப்பாட்டைக் கொண்டிருந்தான். பரிசுத்த ஆவியானவர் அதை நமக்கு திறந்து கொடுக்கும் விதத்தில், அதைத் தான் நீங்கள் இன்றிரவு புரிந்து கொள்கிறீர்கள். அவர், 'நீ சீமோனாக இருக்கிறாய், பரலோகராஜ்யத்தின் திறவு கோல்களை நான் உனக்குத் தருவேன். பூலோகத்தில் நீ எதையெல்லாம் கட்டுகிறாயோ, அதை நான் பரலோகத்திலும் கட்டுவேன். நீ பூலோகத்தில் எதையெல்லாம் கட்டவிழ்க்கிறாயோ, அதை நான் பரலோகத்திலும் கட்டவிழ்ப்பேன்'' என்றார். அதை அவர் கூறினாரா, பரிசுத்த மத்தேயு, 16வது அதிகாரம், ''பூலோகத்திலே நீ எதையெல்லாம் கட்டுகிறாயோ, அதை நான் பரலோகத்தில் கட்டுவேன். பூலோகத்திலே நீ எதையெல்லாம் கட்டவிழ்க்கிறாயோ பரலோகத்திலும் நான் கட்டவிழ்ப்பேன். நான் உனக்கு திறவுகோல்களை தருவேன்'' (எதற்கான?) ''பரலோகராஜ்யத்தின்'' பரலோக ராஜ்யம் என்றால் என்ன? பரிசுத்த ஆவி! வேதாகமும் கூறுகிறது, ''பரலோகராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே...''இல்லை, "தேவனுடைய ராஜ்யம் ,'' என்னை மன்னியுங்கள். ''ராஜ்யம் உனக்குள் இருக்கிறதே.' இப்பொழுது அவர், "இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் வல்லமையாக வருவதை காணுமுன் மரணத்தைப் பார்ப்பதில்லை'' என்று கூறினார். சில நாட்களுக்கு பிறகு பெந்தெகொஸ்தே. பாருங்கள்? ''இங்கே நிற்கிறவர்களில் சிலர்,'' சரியாக இந்த அதே வரி -.... அவர் அதை கூறிக் கொண் டிருந்தார். ''இங்கே நிற்கிறவர்களில் சிலர்'' அவர் மறுரூப மாக்கப்பட்டிருந்தார், "தேவனுடைய ராஜ்யம் வல்லமையாக வருவதை காணுமுன் மரணத்தைப் பார்ப்தில்லை'' என்றார். வேதாகமம் "ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே'' என்று கூறுகிறது. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த போது, நினைவில் கொள்ளுங்கள், அவர் தம்முடைய பக்கவாட்டில் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவு கோல்களை உடையவராக இருந்தார், ராஜ்யத்திற்குரிய திறவு கோல்கள் அல்ல, அது சபைக்கு கொடுக்கப்பட்டது. இப்பொழுது பேதுரு திறவு கோல்களை உடையவனாக இருந்தான். இயேசு தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் அப்படி செய்யவில்லையெனில், சகோதரனே, அவர் தேவனாக இருக்க முடியாது! அவ்வளவு தான். இப்பொழுது அவர், "பேதுருவே, ராஜ்யத்தின் திறவு கோல்களை நான் உனக்குத் தருவேன்'' என்று கூறினார், வேறு விதமாகக் கூறினால், பரிசுத்த ஆவிக்கு. நீ எதையெல்லாம் பூலேகத்திலே கட்டுகிறாயோ, நான் பரலோகத்தில் கட்டுவேன்.'' இப்பொழுது என்ன ஒரு தவறை அவர்கள் செய்தனர், சென்று பாவங்களை மன்னிப்பதும், இன்னும் அதைப் போன்ற வற்றையும் செய்கின்றனர். என்ன ஒரு பிழையாகும்! நாம் பார்ப்போம். அவர்கள் திறவுகோல்களை அவன் மீது வைத்தனர். இப்பொழுது, அவர் தனது முகத்தை நேராக பெந்தெ... அல்லது சரியாக நேராக எருசலேமை நோக்கி இருந்தது. அவர் சிலுவையிலறையப்பட்டு, மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, மனிதனின் மத்தியில் பூமியின் மீது நாற்பது நாட்கள் இருந்து, பரலோகத்திற்குள் மேலேறிச் சென்றார். அவர்கள் மீது தேவனுடைய ராஜ்யம் வருவதைக் காணும் வரை காத்திருக்கும் படியும், அந்த நேரத்தில் பிதாவானவர் ராஜ்யத்தை அவர்களுக்கு ஆவிக்குரிய வடிவில் திரும்ப அளிப்பார் என்றும் அவர்களிடம் கூறினார். அவர்கள் எருசலேம் நகரத்திற்கு சென்று அங்கே பத்து பகல்கள் மற்றும் இரவுகளாக காத்திருந்தனர், பிறகு சடுதியாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம், தேவனுடைய ராஜ்யம் வல்லமையுடன் அவர்கள் மீது வந்தது. அது சரியல்லவா? இப்பொழுது கவனியங்கள் ! பேதுரு , கல்வியறிவு இல்லாதவன், தன்னுடைய சொந்த பெயரைக் கூட கையெழுத்தி டத் தெரியாதவன் (ஒரு போப்பு? ஆமாம், ஒரு போப்பாண்ட வராம்), ஒரு சிறிய சோப்பு பெட்டி போன்று ஏதோ ஒன்றன் மேல் ஏறி பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். அவன் கூறினான், ''யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, இதை நீங்களெல் லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைக்கு செவி கொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்ட வர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக் கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் குமாரரும் குமாரத்தி களும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், என்னுடைய ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். உயரவானங்களிலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே அக்கினி, அக்கினி ஸ்தம்பங்கள், புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.'' அப்படியே தாவீதைக் குறித்தும் இன்னும் மற்றதைக் குறித்தும் பேசிக் கொண்டேயிருந்தான். இங்கே நின்று கொண்டிருந்த விமர்சகர்கள் ... அப்பொழுது, " மனிதனே, சகோதரரே, இரட்சிக்கப் படுவதற்கென நாங்கள் என்ன செய்ய வேண்டும்,'' என்றனர். ''ஓ, ஜாக்கிரதையாயிரு , பேதுருவே, இப்பொழுது தொங்கிக் கொண்டிருக்கிற திறவுகோல்களை உடையவனாக இருக்கிறாய்.'' அது சரியா? முதல் சுவிசேஷ செய்தியாகும்! இயேசு , அதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் சிலுவையி லரைப்படுவதற்கு முன்னர், "பேதுருவே, திறவுகோல்களை நான் உனக்கு தருவேன். நீ எதையெல்லாம் கட்டுகிறாயோ, நான் அதை கட்டுவேன்; நீ எதையெல்லாம் கட்டவிழ்க்கின்றாயோ, அதை நான் கட்டவிழ்ப்பேன். நீ எதையெல்லாம் செய்கின்றாயோ, நான் அதை பரலோகத்தில் அங்கீகரிப்பேன்'' என்றார். அவர் தம்முடைய வார்த்தையின் மனிதனாக இருப்பாரானால், அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்வார்! ஆகவே இங்கே அவன் நின்று கொண்டிருக்கிறான், பரிசுத்த ஆவியானவர் முதல் முறையாக தம்முடையதற்காக விழுந்தது, ''இரட்சிக்கப்படுவதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று பேதுருவிடம் கேட்கப்பட்டது. ''கவனி , ராஜ்யத்திற்குள் திறவுகோலை முதன்முறையாக உள்ளே நுழைக்கின்றாய். இயேசு சிலநாட்களுக்கு முன்பு, பத்து நாட்களுக்கு முன்னர் சென்று பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடு' என்று உன்னிடம் கூறினாரே. நீ என்ன செய்யப் போகின்றாய்? ஆனால் நீ ஆவிக்குரிய வெளிப்பாட்டை பெற்றிருந்ததால் அவர் உன்னிடம் திறவு கோல்களைக் கொடுத்தார். என்னுடைய சபை கட்டப்பட்டி ருக்கும், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" ஆகவே உங்களுடைய கோட்பாடுகள் போதகங்கள் இன்னும் நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அதை எடுத்துக் கொள், ஆனால் அது படுதோல்வியடையும் (அவ்வாறு தான் இருந் துள்ளது) ஆனால் ஜீவிக்கின்ற தேவனுடைய வல்லமையானது நித்தியத்திற்குள்ளாக சென்று கொண்டேயிருக்கும். ஒரு ரேடியம் ஒலிக்கதிரைப் போன்று, அவள் சென்று கொண்டேயிருப்பாள், முடிவில்லாமல் 'பேதுருவே, நீ திறவு கோல்களைக் கொண்டிருக்கிறாய். நீ இங்கே என்னவெல்லாம் செய்கின்றாயோ, தேவன் அதை பரலோகத்தில் அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும்.'' அது சரியா? ''நீ என்ன கூறுகிறாய், பேதுருவே? இரட்சிக்கப்படுவதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' பேதுரு கூறினான்..... நீ போய் "மரியாளே வாழ்க" என்று கூறாதே, அப்படி ஒரு காரியம் இல்லவேயில்லை, நொவினா ஜெபம் செய்வது. வந்து கைகளைக் குலுக்கி சபை புத்தகத்தில் உன்னுடைய பெயரை பதிவு செய்து உன் மேல் அவர்கள் தண்ணீரை தெளிக்கும் படி செய்யாதே; அப்படிப்பட்ட ஒரு காரியம் கிடையவே கிடையாது. அது பிராடெஸ்டென்ட் சபை தலை வணங்கிக் கொண்டிருக்கின்ற கத்தோலிக்க போதகமாகும். அவன் நீங்களெல்லாரும் சென்று..... இப்பொழுது, நீங்கள் எல்லாரும் சென்று பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞதனஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டு மென்று சில நாட்களுக்கு முன்பு இயேசு என்னிடம் கூறினார்,'' என்று கூறவில்லை. ஆவிக்குரிய வெளிப்பாட்டை பெற்றிருக்கின்ற ஒரு மனிதன் அதைக் கூறமாட்டான். அவன், "நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் உங்களு டைய பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத் தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கு உண்டா யிருக்கிறது" என்று கூறினான். அதுதான் அப்பொழுது திறவு கோல் உள்ளே நுழைந்து பூட்டினது, பரலோகத்தில் பூட்டினது! அதன் காரணமாகத்தான் பவுல் யோவானுடைய சீஷர் களிடம், "நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், மறுபடியுமாக இயேசு கிறுஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று கூறினான். முன்பு அதை நீங்கள் அறிந்திருக்கவில்லை, இப்பொழுது நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்களே! ஹூம்! அது சரி. அது உங்களைப் பொறுத்தது. அது உண்மை . ஆனால் ஒரு திரித்துவவாதி, திரித்துவ ஞானஸ்நானம் ஒருக்காலும் புதிய ஏற்பாடாகிய சபையில் அங்கிகரிக்கப்படவில்லை; கத்தோலிக்க சபையில் மாத்திரமே, பிராடெஸ்டென்ட் சபை அதற்கு தலை வணங்குகிறது. கவனியுங்கள்? அதற்காக அநேக மக்கள் உங்களுக்கு மனக் கசப்பைக் கொள்வார்கள். ஆனால் சகோதரனே நீ உன்னு டைய தெரிந்து கொள்ளுதலை செய்துத்தான் ஆகவேண்டும். இப்பொழுது நீ , 'சகோதரன் பிரன்ஹாம், நான் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப் பட்டுள்ளேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நான் பெற்றிருக் கிறேன்'' என்று கூறலாம். உன்னுடைய வார்த்தையை நான் சந்தேகிக்கவில்லை. உன்னு டைய வார்த்தை நான் சந்தேகிக்க எனக்கு எந்த ஒரு காரணமும் கிடையாது; நான் அதை நம்புகிறேன். அங்கே அவர்கள் ஞானஸ் நானம் பண்ணப்படும் முன்னதாகவே தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியை அளித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன்; ஆனால் அவர்கள் என்ன செய்ய வேண்டு மென்று பேதுரு கூறினபோது அவர்கள் சென்று அதைச் செய்தனர். அது சரி. இப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தெரியும், அது சரி; வெளிச்சமானது கொண்டு வரப்படும் போது நீங்கள் வெளிச்சத்தில் நடக்க மறுத்தால், நீங்கள் இருளுக்கு திரும்பு வீர்கள். சரி ஆமென்! அது சரி. என்னை மன்னியுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு "அவ்வாறே அது இருக்கட்டும்'' என்று கூக்குரலிட்டதற்காக என்னை மன்னிக்க நான் கேட்கவில்லை. இல்லை ஐயா, நான் மறுபடியுமாக ''ஆமென்' என்று கூக்குரலிடு வேன். அது சரி. ஆம், ஐயா. சகோதரன் பிரன்ஹாம், ஏன் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்? ''பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு பதிலாக ஏன் நீர் அதை செய்கின்றீர்? ஏனெனில் வேதாகமம் அதை போதிக்கின்றது! புரிந்து கொண்டீர் களா? சகோதரன் பிரன்ஹாம், ஏன் நீங்கள் கால்களைக் கழுவுகின்றீர்? ஏனெனில் வேதாகமம் அதை போதிக்கின்றது. நான் முழு சுவிசேஷத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறேன். அது சரி, இப்பொழுது. நீர் பேசின அந்த தவறான ஞானஸ்நானம் என்பது என்ன? அது தான். அது சரியாக அது தான் எங்கேயும் ...... ஏற்பாட்டில் படித்து எங்காகிலும் ஒரு நபருக்காவது .... இப்பொழுது அருமையான ஜனமாகிய உங்களுக்கு, நான் உங்கள் உணர்வை புண்படுத்தவில்லை, எனக்கு அவ்விதமாக செய்ய விருப்பமில்லை. நான் உங்களை தாழ்மையாக இருக்கும் படி கேட்கிறேன் இந்த ... இதை நேராக நோக்கிப் பார்த்து அது எவ்விதமாக காணப்படுகின்றதென்று பாருங்கள். நேராக அதை வேதாகமத்தின்படி அதை நேராக உற்று நோக்கிப் பாருங்கள், உங்களுடைய சபையோ அல்லது ஏதோ ஒரு முட்டாள்தனமான, யாரோ ஒருவர் தங்களுடைய தலையில் திணிக்கப்பெற்றுள்ள ஒரு அற்பமான காரியத்தையோ அல்ல, ஆனால் தேவனுடைய வார்த்தையை நோக்கிப் பாருங்கள். நிச்சயமாக! சர்வவல்லமையுள்ள தேவன், இந்த விதமாக, இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களுடனும், புதிய ஏற்பாட்டிற்கு பிறகு எப்பொழுதுமே இருந்திராத காரியங்களுடன் அவர் கொண்டிருக் கின்ற இந்த ஊழியத்தை எனக்கு அளித்து, அதைப் போன்ற தவறான ஒன்றில் என்னை நடக்க விடுவாரா? நிச்சயமாக இல்லை! ஆகவே, சகோதரனே, நான் வெளி நாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு, நான் என்னுடைய நேரத்தின் அதிகமான பகுதியை தேவனுடைய வார்த்தை பிரசங்கிப்பதற்காகத் தான் செலவிடு கிறனே தவிர தெய்வீக சுகமளித்தல்களுக்கும் அற்புதங்களின் பேரிலும் அல்ல. அது முற்றிலும் சரி. உண்மையாக. இப்பொழுது நாம் பார்ப்போம்.